செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி தம்பதியர் தங்கள் குழந்தையுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தனர். மதுராந்தகம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது.
காரில் இருந்த 3 பேரும் உடனடியாக வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.