காசாவில் தற்காலிக போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான அமெரிக்காவின் பரிந்துரையை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது.
காசா போர் நிறுத்தம் கடந்த சனிக்கிழமையுடன் முடிவுக்கு வந்த நிலையில், அதை நீட்டிக்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காஃப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் வலியுறுத்தினார்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இந்த முன்மொழிவை அமெரிக்கா பரிந்துரைத்தது.
இதை ஏற்றுக்கொண்ட இஸ்ரேல், காசாவில் பிணைக் கைதிகளாக உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிபட்டவர்களில் 50 சதவீதம் பேர், தற்காலிக போர் நிறுத்த நீட்டிப்பு அமலுக்கு வரும் முதல் நாளில் விடுவிக்கப்படுவர் என அறிவித்தது.
மேலும், நிரந்தர போர் நிறுத்தத்துக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டதும் மீதமுள்ள பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவர் என இஸ்ரேல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.