ஓசூர் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் அதிர்ஷடவசமாக ஓட்டுநர் உயிர் தப்பினார்.
கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த தனக்குமார் என்பவர் பணி நிமித்தமாக சேலத்திற்கு காரில் சென்றுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக சோதனை சாவடி அருகே சென்றபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் காரை நிறுத்தியுள்ளார்.
அப்போது, சற்றும் எதிர்பாராத விதமாக ஆம்னி சொகுசு பேருந்து காரின் பின்புறம் மோதியுள்ளது. இதில், கார் முன்னோக்கி சென்று முன்னால் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் சிக்கி அப்பளம்போல நொறுங்கியது.
இந்த விபத்தின்போது காரை ஓட்டி வந்த தனக்குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.