சமயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தில் சாசகத்தில் ஈடுபட்டுள்ளார்.
சாலையில் ஆபத்தான முறையிலும், மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் இளைஞர் சாகசத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொள்ள திருச்சி மாவட்ட எஸ்பி உத்தரவிட்ட நிலையில், இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட பாலகிருஷ்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், இளைஞரிடம் இருந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், இனிவரும் காலங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்குமாறு அறிவுறுத்தி பிணையில் அனுப்பி வைத்தனர்.