குன்றத்தூர் முருகன் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
குன்றத்தூர் மலை குன்றின் மீது அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோயிலில் பல்வேறு காரணங்களால் கடந்த 500 ஆண்டுகளாக பிரம்மோற்சவ விழா நடத்தப்படாமல் இருந்து.
அறநிலையத்துறை சார்பில் இந்த கோயிலுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், 500 ஆண்டுகளுக்கு பிறகு கடந்தாண்டு பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் ஆண்டு பிரம்மோற்சவ விழா காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கோயில் வளாகத்தில் அமைந்துள்ள கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்ட நிலையில், பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.