திருப்பூரில் அதிமுக பொதுக்கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பதற்காக அக்கட்சி நிர்வாகிகள் புதிய வழிமுறையை பயன்படுத்தியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.
பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊத்துக்குளி தாலூகாவில் வரும் 5-ம் தேதி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் முன்னாள் அமைச்சர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், கே.சி.கருப்பன், தாமோதரன் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். இந்நிலையில், இந்த பொதுக்கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பதற்காக மாவட்ட நிர்வாகிகள் புதிய வழிமுறை ஒன்றை கையாண்டுள்ளனர். குறிப்பாக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் நபர்களில் 3 பேருக்கு தங்க நாணயமும், 300 பேருக்கு மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களும் மற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் குலுக்கல் முறையில் வழங்கப்படும் என அறிவித்து, அப்பகுதி முழுவதும் துண்டு பிரசுரங்களை வழங்கியுள்ளனர். அதிமுக நிர்வாகிகள் இந்த செயல்பாடு அப்பகுதி பேசுபொருளாகி உள்ளது.