திருப்பத்தூரில் காவல்துறை ஒருதலைபட்சமாக செயல்படுவதாக விவசாயி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தோப்பலகுண்டா பகுதியை சேர்ந்த சுசிலா என்ற பெண்ணுக்கு 36 செண்ட் விவசாய நிலம் இருப்பதாக கூறப்படுகிறது. கருத்தபையன் என்ற நபர் இந்த நிலம் தன்னுடையது என சுசிலாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், சுசிலா இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் ஒரு தரப்புக்கு மட்டும் சாதகமாக காவல்துறை செயல்படுவதாக சுசிலா குற்றம் சாட்டியுள்ளார்.