மகா கும்ப மேளாவையொட்டி, திரிவேணி சங்கமத்தில் இருந்து எடுக்கப்பட்ட 10 ஆயிரம் லிட்டர் புனித நீர் உத்தர பிரதேசத்தில் உள்ள 75 மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
நொய்டாவில் புனித நீர் கொண்டுவரப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. திரிவேணி சங்கமத்திற்கு நேரில் செல்ல இயலாதவர்கள் பக்தி பரவசத்துடன் புனித நீரை பெற்றுக் கொண்டனர்.