வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறுவதில் விவசாயம் முக்கிய பங்கு வகிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பிரதமர் மோடி 2 முக்கிய இலக்குகளை நிர்ணயித்திருப்பதை சுட்டிக்காட்டினார்.
மூன்றாவது பெரிய பொருளாதரமாக உருவெடுப்பது மற்றும் 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவது ஆகியவற்றை இலக்காக நிர்ணயித்திருப்பதாக கூறிய அமித் ஷா, இதில் விவசாயம் முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்டார்.