ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் புகைபிடித்த பயணி கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள மன்னாரைச் சேர்ந்த 54 வயதுடைய நபர், சவுதி அரேபியாவில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் வந்தார்.
அப்போது அவர் கழிப்பறையில் லைட்டரைப் பயன்படுத்தி, சிகரெட்டைப் பற்ற வைத்தார். இதனால் விமானத்தில் தீ அபாய எச்சரிக்கை அலாரம் ஒலிக்கத் தொடங்கியது. அதனை தொடர்ந்து விமானம் கேரளாவில் தரை இறக்கப்பட்டு, அந்த பயணி போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார்.