அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள்தான் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருப்பதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்
மேலும், ரஷ்ய அதிபர் புதினை விட சட்டவிரோதமாக குடியேறுபவர்களை நினைத்துதான் தாம் மிகவும் கவலைப்படுவதாக கூறிய டிரம்ப், இதன்மூலம் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள், போதைப்பொருள் விநியோகிப்பவர்கள், கொலைகாரர்கள் அமெரிக்காவில் ஊடுருவுவதாக குறிப்பிட்டார்.
சட்டவிரோத குடியேறிகளால் ஐரோப்பா பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாகவும் டிரம்ப் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.