ஜோர்டான் வழியாக இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக கூறி கேரளாவை சேர்ந்த நபர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
திருவனந்தபுரத்தை சேர்ந்த கேப்ரியல் மற்றும் எடிசன் ஆகியோர் சுற்றுலா விசாவில் ஜோர்டானுக்குச் சென்ற நிலையில், இஸ்ரேலின் எல்லையை சட்டவிரோதமாக கடக்க முயன்றதாக தெரிகிறது.
அப்போது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் தாமஸ் கேப்ரியல் உயிரிழந்தார். எடிசன் காலில் குண்டு பாய்ந்து நாடு கடத்தப்பட்டார்.