செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் நோக்கில் கூகுள் நிறுவன ஊழியர்கள் வாரத்துக்கு 60 மணிநேரம் வேலை செய்ய வேண்டுமென அதன் இணை நிறுவனர் செர்கி பிரின் அறிவுறுத்தினார்.
மேலும், ஜெமினி ஏஐ பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் அலுவலகத்துக்கு வர வேண்டுமென ஆலோசனை கூறிய அவர், அப்போதுதான் ஏஐ போன்ற போட்டி நிறைந்த உலகில் கூகுள் நிறுவனத்தால் தாக்குப்பிடித்து நிற்க முடியும் என குறிப்பிட்டார்.
வாரத்துக்கு 60 மணிநேரத்துக்கு குறைவாக வேலை பார்ப்பவர்களால் பிறரும் மந்தமாக பணியாற்றும் சூழலுக்குத் தள்ளப்படுவதாக கூகுள் செர்கி பிரின் கவலை தெரிவித்தார்.