ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் நிகழாண்டு நடைபெற உள்ள நிலையில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விடியோவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மேலும், இந்த புதிய ஜெர்சியை விலை கொடுத்து வாங்குவதற்கான இணையதளத்தின் லிங்கையும் அந்த அணி பகிர்ந்துள்ளது.