வருவாய் இழப்பை ஈடுசெய்யும் நோக்கில், 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ஓலா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அந்நிறுவனத்தின் கொள்முதல், வாடிக்கையாளர் தொடர்பு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக ஓலா நிறுவன பங்குகள் ஐந்து சதவீதத்துக்கும் கீழே சரிவைச் சந்தித்துள்ளது.