கலப்பட டீசல் காரணமாக கார் எஞ்சின் பழுதான நிலையில், அதனை சரிசெய்ய ஏற்பட்ட செலவை உரிமையாளருக்கு வழங்க பெட்ரோல் பங்குக்கு சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த அஜய் பாஸ்கர் என்பவர், 2022ம் ஆண்டு சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்-கில் காருக்கு டீசல் நிரப்பியுள்ளார்.
சிறிது தூரம் சென்ற காரின் எஞ்சின் பழுதான நிலையில், அதனை சரி செய்ய 8 லட்சம் 19ஆயிரம் ரூபாய் செலவிட்டுள்ளார்.
இதுகுறித்து நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அவர், கலப்பட டீசல் காரணமாக எஞ்சின் பழுதானதாக குற்றம் சாட்டினார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், எஞ்சின் பழுதுபார்க்க செலவான தொகையுடன் கூடுதலாக 12 ஆயிரம் ரூபாயை மனுதாரருக்கு வழங்க சம்மந்தப்பட்ட பெட்ரோல் பங்குக்கு உத்தரவிட்டனர்.