பழனி மலைக்கோயில் மின் இழுவை ரயில் நிலையத்தில் பாம்பு புகுந்ததால் பக்தர்கள் அச்சமடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோயிலில் மின் இழுவை ரயிலில் ஏறுவதற்காக பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
அப்போது கூட்டத்திற்குள் திடீரென பாம்பு ஒன்று புகுந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பக்தர்கள் கூச்சலிட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.