பிரிட்டன் டிவி நிகழ்ச்சியில் சாதித்த இந்திய சிறுமிக்கு பாராட்டுகள் குவிகின்றன.
பிரிட்டன்ஸ் காட்டேலன்ட் என்ற ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி உலகம் முழுவதும் பிரபலமானது. இந்த நிகழ்ச்சியில் பாடகர்கள், நடன கலைஞர்கள், மேஜிக் கலைஞர்கள், காமெடியன்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ஏராளமான பணமும், பிரிட்டன் அரச குடும்பத்தினர் முன் நிகழ்ச்சியை நடத்தி காண்பிக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
இந்த பிரபலமான நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் பங்கேற்ற 8 வயது பினிதா சேத்ரி என்ற சிறுமி, அற்புதமாக நடனமாடி பார்வையாளர்கள் மற்றும் நடுவர்களை ஆச்சர்யப்படுத்தினார்.
உடலை வில்லாக வளைத்தும், முன்னும் பின்னும் காற்றில் பறந்து சிறுமி ஆடிய நடனம் இணையத்தில் வைரலாகி வருகிறது.