இந்திய ரயில்வே துறையின் பொதுத்துறை நிறுவனங்களான ஐஆர்சிடிசி மற்றும் ஐஆர்எஃப்சி ஆகிவற்றுக்கு நவரத்னா அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நிதி மற்றும் வணிகச் சந்தையில் சிறப்பாக செயல்பட்டதற்காக ரயில்வே துறையின் பொதுத்துறை நிறுவனங்களான ஐஆர்சிடிசி மற்றும் ஐஆர்எஃப்சி ஆகிவற்றுக்கு நவரத்னா அந்தஸ்து வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வேயின் கீழ் இயங்கும் 7 நிறுவனங்கள் இதுவரை நவரத்னா அந்தஸ்து பெற்றுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பின் மூலம் நாட்டில் உள்ள நவரத்னா பொதுத்துறை நிறுவனங்களின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது எனவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய ரயில்வே அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ், இந்திய ரயில்வே துறையை உலகில் தலைசிறந்ததாக மாற்றுவதில் பிரதமர் மோடி கொண்டிருக்கும் அக்கறையை இது வெளிப்படுத்துவதாக தெரிவித்தார்.
இந்திய ரயில்வே துறையின் கீழ் இயங்கும் 7 பொதுத்துறை நிறுவனங்கள் நவரத்னா அந்தஸ்து பெற்றது, மாபெரும் சாதனை என்றும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம் தெரிவித்தார்.