அமெரிக்காவின் அதிநவீன விமானம் தாங்கி போர்க்கப்பல் தென்கொரியாவுக்கு வந்துள்ளதால் கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
அமெரிக்காவின் நடவடிக்கையால் ஆத்திரமடைந்துள்ள வடகொரியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக வடகொரிய அதிபரின் சகோதரியான ஜிம் யோ ஜாங்கின் அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.
அமெரிக்காவை எச்சரிக்கும் வகையில் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் சோதனையை நடத்தலாம் என தகவல் வெளியாகியுள்ளது.