பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக, அவரது பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சப் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
அவருக்கு உடல்நலக்குறைவை ஏற்படுத்தி உயிரிழக்க வைக்க சதித்திட்டம் தீட்டப்படுவதாகவும் அக்கட்சி கூறியுள்ளது. சிறையில் உள்ள இம்ரான் கானை 6 பேர் சந்திக்கலாம் என நீதிமன்றம் அனுமதி அளித்தபோதும், அவரை சந்திக்க சிறை அதிகாரிகள் மறுப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
பல்வேறு வழக்குகளின் கீழ் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட இம்ரான்கான், ராவல்பிண்டியில் உள்ள அடிலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.