ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 58வது கூட்டத்தில், காஷ்மீர் மற்றும் மணிப்பூர் குறித்து பேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவர் வோல்கர் துர்க் கருத்துக்களுக்கு இந்தியா கடும் பதிலடி கொடுத்துள்ளது.
இந்த கூட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற அரிண்டம் பாக்சி பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா தொடர்ந்து ஆரோக்கியமாகவும், துடிப்பாகவும், பன்முகத்தன்மை கொண்டதாகவும் உள்ளது என தெரிவித்தார்.
மேலும், வோல்கர் துர்க்கின் ஆதாரமற்ற கருத்துக்கள் அடிப்படை உண்மைக்கு முரணாக உள்ளது எனவும் அரிண்டம் பாக்சி தெரிவித்தார்.