அமெரிக்காவுடனான தங்களது நட்புறவு தொடரும் என்று நினைப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புடன் காரசார வாக்குவாதம் ஏற்பட்டதால் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பாதியில் வெளியேறினார்.
இதையடுத்து அவருக்கு இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தநிலையில் போர் நிறுத்தம் பற்றி பேசியுள்ள ஜெலன்ஸ்கி, உக்ரைனுக்கும், ரஷியாவிற்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்த நீண்ட காலம் பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.