கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே பொறியாளர் வீட்டில் 100 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே உள்ள வளையம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். முன்னாள் ஜடி நிறுவன பொறியாளரன இவரது வீட்டில் யாருமில்லாத நேரத்தில் உள்ளே நுழைந்து பீரோவை உடைத்த சிலர், 100 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
சம்பவம் குறித்து ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்ற நிலையில் சிசிடிவி காட்சிகள் மூலம் கோவை கீரநத்தம் பகுதியில் பதுங்கியிருந்த கொள்ளையர்களை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களை கைது செய்ய முயன்ற போது மாடியில் இருந்து இரண்டு பேர் குதித்ததில் கால் முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து மொத்தம் ஐந்து பேரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஹிம்மத்சிங், ராகுல் சோனி,யாஷ்சோனி,கமல்சிங் அலவா,முகேஷ் கியான் சிங் ஆகியோர் என்பது தெரிய வந்தது.