திருப்பத்தூரில் புதிதாக கட்டப்பட்ட அரசுப் பள்ளியில் சிமெண்ட் பெயர்ந்து விழுந்ததால் 3 மாணவர்கள் காயமடைந்தனர்.
சங்கராபுரம் பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு புதிதாக அரசு தொடக்கப்பள்ளி திறக்கப்பட்டது. இங்குள்ள வகுப்பறையில் மாணவர்கள் படித்துக் கொண்டிருந்த போது சிமெண்ட் பூச்சு அவர்கள் மீது விழுந்தது.
இதனால் 3 மாணவர்கள் காயமடைந்த நிலையில், அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.