சூடானில் கடந்த 1 ஆண்டில் மட்டும் 221 குழந்தைகள் ராணுவ வீரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக ஐநாவுக்கான குழந்தைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சூடான் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படையினருக்கும் இடையே போர் உருவானது.
யுனிசெப் அறிக்கையின்படி, போர் தொடங்கிய்தில் இருந்து உள்நாட்டுக்குள் சுமார் 61 ஆயிரத்து 800 குழந்தைகள் இடம்பெயர்ந்துள்ளனர்.
போரின்போது இரு படையினரும் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்வது, கட்டாய திருமணம் செய்வது போன்ற குற்றச்செயல்கள் தொடர்ந்து வருகின்றன.