ரெனால்ட் நிறுவனம் அதன் பிரபலமான ஹேட்ச்பேக் க்விட் மற்றும் காம்பாக்ட் எஸ்யூவி கிகர் மற்றும் காம்பாக்ட் 7 சீட்டர் கார் ட்ரைபர் ஆகியவற்றில் CNG கிட் விருப்பத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த CNG கிட் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டதாக அந்நிறுவனம் கூறுகிறது. இந்த CNG ரெட்ரோ கிட்கள் ஆரம்பத்தில் இந்தியாவின் ஐந்து மாநிலங்களான ஹரியானா, உத்தரப்பிரதேசம், டெல்லி, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகியவற்றில் கிடைக்கும் மற்றும் படிப்படியாக மற்ற மாநிலங்களில் கிடைக்கும்.
மேலும், இந்த வாகனங்கள் ஆனது மூன்று வருட வாரண்டியுடன் வரும் என்று நிறுவனம் கூறுகிறது.