அமெரிக்காவில் டிக்டாக் தடை செய்யப்பட்டுள்ளதால், அங்குள்ள பயனர்களை ஈர்க்கும் விதமாக, ரீல்ஸ்களுக்கென பிரத்யேகமான புதிய ஆப்பை இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
சமீபத்திய தகவல்படி, இன்ஸ்டாகிராமின் தலைவரான ஆடம் மோசேரி மற்றும் அவரது குழுவினர் இதுகுறித்து விவாதித்ததாகவும், அதற்கான உத்திகள் குறித்து அவர்கள் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
ரீல்ஸ் ஆப்பைத் தனியாக வழங்குவதன் மூலம் மெட்டா அதன் வளங்களை விரிவுபடுத்தவும், வெவ்வேறு வகையான பார்வையாளர்களைக் கவரவும் முடியும் என நம்புகின்றது.