பிரசித்திபெற்ற சிறுவாபுரி முருகன் கோயிலில் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் எல்.முருகன் சுவாமி தரிசனம் செய்தார்.
திருவள்ளூர் மாவட்டம், சிறுவாபுரியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் செவ்வாய்கிழமையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அப்போது, முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதில் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டு சுவாமி பாலசுப்பிரமணியரை தரிசித்தார்.
தொடர்ந்து கோயில் பிரகாரத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்தார். இதற்கிடையே ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் கோயில் முன் திரண்டதால் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனர்.