தன்னை இனி யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என நடிகை நயன்தாரா வேண்டுகோள் வைத்துள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், பலரும் தன்னை லேடி சூப்பர்ஸ்டார் என அழைத்து வாழ்த்துவதாகவும், இந்தப் பட்டத்திற்கு தான் மிகவும் கடமைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இனிமேல் தன்னை அந்த அடைமொழியுடன் யாரும் அழைக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள நயன்தாரா,
தனது பெயர்தான் தனக்கு மிகவும் நெருக்கமானது எனவும், ஒரு நடிகையாக மட்டுமல்லாமல், ஒரு தனிநபராகவும் அது தன்னை மட்டுமே குறிப்பதாக கூறியுள்ளார்.
பட்டங்களும் விருதுகளும் மதிப்புமிக்கவைதான் எனவும், ஆனால் அவை சில சமயங்களில் பார்வையாளர்களுடனான நிபந்தனையற்ற பிணைப்பில் இருந்து நம்மைப் பிரிக்கக்கூடும் என தெரிவித்துள்ளார்.