லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ள இளையராஜவை நேரில் சந்தித்து, நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்தார்.
Valiant என்ற பெயரில் தனது முதல் சிம்ஃபொனியை இசையமைப்பாளர் இளையராஜா உருவாக்கியிருக்கிறார். மிகவும் சிக்கலான இசைக்கோர்வையாக கருதப்படும் சிம்பொனியை வெறும் 34 நாட்களில் எழுதி முடித்ததாக இளையராஜா தெரிவித்துள்ளார்.
இதனை வரும் 8ஆம் தேதியன்று இளையராஜா லண்டனில் அரங்கேற்றம் செய்யவுள்ளார். எனவே, பலரும் இளையராஜாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் இளையராஜாவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் நினைவு பரிசும் வழங்கினார்.