தேனியில் 2 விவசாயிகள் தோட்டத்தில் உயிரிழந்து கிடந்த நிலையில் இருவரும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
ஆண்டிப்பட்டியில் கடந்த பிப்ரவரி 26ம் தேதி விவசாயிகளான மணி, கருப்பையா ஆகிய இருவரும் தோட்டத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், விவசாயிகளைக் கொலை செய்ததாக மேலப்பட்டியை சேர்ந்த கணேசன் என்பவர் ஆண்டிப்பட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இந்நிலையில், பிரேத பரிசோதனையில் கருப்பையா 16 இடங்களில் வெட்டப்பட்டும், கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல் தாக்குதலில் தலை நசுங்கி மணி உயிரிழந்தார் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே 7 நாட்களுக்கு பின் விவசாயிகளின் உடல்களை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். அப்போது பேட்டியளித்த அவர்கள், போலீசார் மெத்தனமாக செயல்படுவதாகவும், கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் விரைவில் கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்..