லண்டனில் சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்யவுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில். “ஐந்து தசாப்தங்களாக திரையுலகை இசையால் ஆளும் இசைஞானி இளையராஜா அவர்கள், “வேலியன்ட்” எனும் தலைப்பில் உருவாக்கிய தனது முதல் சிம்பொனியின் நேரடி நிகழ்ச்சியை, லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் மார்ச் 8 ஆம் தேதி அரங்கேற்ற உள்ளதை முன்னிட்டு, மரியாதை நிமித்தமாக அவரைச் சந்தித்து வாழ்த்து கூறி மகிழ்ந்தேன்.
நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேற, தமிழக பாஜக சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.