தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கியது.
திருச்செந்தூர் அடுத்த குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றது.
இந்நிலையில், ஏவுதளம் அமைப்பதற்கான பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கியது. இதில் இஸ்ரோ இயக்குநர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் அடுத்த ஆண்டுக்குள் பணிகள் முழுவதும் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ராக்கெட் ஏவப்படும் இடத்தில் பெட் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகளுக்காக 2233 ஏக்கர் நிலம் முழுமையாக கையகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.