எமர்ஜென்சியை தீரத்துடன் எதிர்த்தவர் ஒடிசா முன்னாள் முதலமைச்சர் பிஜு பட்நாயக் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
ஒடிசா முன்னாள் முதலமைச்சர் பிஜு பட்நாயக்கின் 109-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ஒடிசாவின் வளர்ச்சி மற்றும் மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அவர் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூருவதாகவும், அவசரநிலையை கடுமையாக எதிர்த்த அவர் ஜனநாயகக் கொள்கைகளுக்கு தீரத்துடன் உறுதிபூண்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.