மேட்டுப்பாளையம் – உதகை இடையே வரும் 28-ம் தேதி முதல் சிறப்பு மலை ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினந்தோறும் காலை 7.10 மணிக்கு சிறப்பு மலை ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. 4 பெட்டிகள் கொண்ட ரயிலாக இயக்கப்பட்டு வருவதால் ஏராளமான பயணிகள் காத்திருந்து பயணிக்கும் நிலை உள்ளது.
இந்நிலையில் கோடைக்கால சிறப்பு ரயிலாக வரும் 28-ம் தேதி முதல் ஜூலை 7-ம் தேதி வரை சிறப்பு மலை ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் ஏப்ரல் 7-ம் தேதி வரை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.10 மணிக்கு கூடுதலாக சிறப்பு ரயில் இயக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மறுமார்க்கத்தில் சனி மற்றும் திங்கள் ஆகிய கிழமைகளில் கூடுதல் ரயில் சேவை இயக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.