ஏற்காடு மலைப் பாதையில் இளம்பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், திருமணம் செய்து கொள்ளும்படி நிர்பந்தித்ததால் தோழிகளுடன் இணைந்து காதலன் கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப் பாதை பள்ளத்தில் இளம் பெண் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் இளம்பெண்ணும் பெரம்பலூரை சேர்ந்த அப்துல் ஹபீஸ் என்ற பொறியியல் மாணவரும் காதலித்து வந்தது தெரியவந்தது.
பின்னர் இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் அப்துல் ஹபீஸ், அவரது தோழிகளுடன் இணைந்து இளம்பெண்ணை கொலை செய்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் காதலனுக்காக இளம்பெண் இஸ்லாம் மதத்திற்கு மாறியதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அப்துல் ஹபீஸ் மற்றும் அவரது தோழிகள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.