திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் உள்ள அரங்கநாதர் சுவாமி கோயிலில் வெள்ளி கருட சேவை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் மாசி தெப்பத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. விழாவின் 4-ம் நாள் உற்சவமான வெள்ளி கருட சேவை பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
நம்பெருமாள் வெள்ளி கருடவாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேள தாளம் முழங்க கோயிலை வலம் வந்த சுவாமி 4 உத்திர வீதிகள் வழியாகவும் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதையடுத்து வாகனமண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாளை பக்தர்கள் பக்தி கோஷத்துடன் தரிசித்தனர். வெள்ளி கருட வாகன சேவையை காண சுற்றுப்புற பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்தனர்.