சேலம் மாநகர காவல்துறையினர், தங்களின் நிர்வாகிகள் மீது பொய் வழக்கு பதிவதாக விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சேலம், அருள் சாலையில் லாரிகள் மூலம் மாடுகள் கடத்தப்படுவதாகவும், துன்புறுத்தப்படுவதாகவும் காவல்துறையினருக்கு விஷ்வ ஹிந்து பரிசத் நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர்.
ஆனால் கடத்தல் காரர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீசார் தங்கள் நிர்வாகிகள் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாக விஸ்வ ஹிந்து அமைப்பினர் தெரிவித்தனர்.
மேலும், பொய் வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகர காவல் ஆணையரிடம் விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பினர் புகார் மனுவும் அளித்தனர்.