திருத்தணி முருகன் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார்.
திருத்தணி முருகன் கோயிலுக்கு வருகை தந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கோயில் வளாகத்தை வலம் வந்தும், உற்சவர் முருகப்பெருமானை தரிசித்தும் வழிபட்டார்.
இவர் தன்னுடைய புதிய படத்தின் கதையை சுவாமியின் காலடியில் வைத்து பூஜை செய்தார். பின்னர் இவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் மற்றும் பட்டுப்புடவை வழங்கி கவுரவிக்கப்பட்டது.