சென்னை, அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த துளசிபாய் என்பவரின் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்திய நிலையில் அதற்கான உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
எனவே நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தக்கோரி பாதிக்கப்பட்டவர் சார்பு நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.
அதன் பேரில் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த நீதிமன்ற அதிகாரிகளிடம் வட்டாட்சியர் அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தி கால அவகாசம் கேட்டுள்ளார்.