பிரபல ரவுடி பாம் சரவணனை காவலில் எடுத்த திருமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமங்கலம் அடுத்த தனியார் ஓட்டலில் பதுங்கியிருந்த ரவுடி கும்பலை கடந்தாண்டு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 துப்பாக்கிகள், ஆயுதங்கள் கைபற்றப்பட்டன.
இந்த கும்பல் தீட்டிய சதித்திட்டத்தில் ரவுடி பாம் சரவணனுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து, அவரை காவல்துறையினர் காலில் சுட்டுப் பிடித்தனர். இதையடுத்து அவரை நொளம்பூர் காவல்நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.