சிவகங்கை அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு குளுக்கோஸ் ஏற்றுவதற்காக கையில் பொருத்தப்பட்ட வென்ப்ளாண்ட் டியூப்பை மருத்துவர்கள் அகற்ற மறந்ததால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டது.
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரஹீம் என்பவருக்கு இடது காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு குளுக்கோஸ் ஏற்றுவதற்காக கையில் வென்ப்ளாண்ட் டியூப் பொருத்தப்பட்டது.
அறுவை சிகிச்சை முடிந்து அவரை டிஸ்சார்ஜ் செய்ய முடிவு செய்த மருத்துவர்கள் கையில் பொருத்தப்பட்ட டியூப்பை அகற்ற மறந்துள்ளனர். இதனால் ரஹீமுக்கு வலி ஏற்பட்ட நிலையில் மீண்டும் கையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு குழாய் அகற்றப்பட்டது.