ஜம்மு – காஷ்மீரின் உதம்பூரில் சாலையில் ஏற்பட்ட விரிசலால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
உதம்பூர் மாவட்டத்தின் பஞ்சாரி பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள சாலைகள் சேதமடைந்து ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டன.
இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அத்தியாவசிய தேவைக்குக் கூட வெளியில் செல்ல முடியாமல் அவதிக்கு ஆளாகியுள்ள நிலையில், சாலையை சீர்செய்யும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.