சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் தற்கொலை செய்து கொண்ட சிறுமியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெத்தநாயக்கன் பாளையத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அதே பகுதியை சேர்ந்த சுபாஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர், சுபாஷ் மீது காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
இதையடுத்து சுபாஷை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமினில் வெளியே வந்த சுபாஷ், சிறுமிக்கு தொடர்ந்து தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், சுபாஷ் மீது நடவடிக்கை எடுக்கக்கூறி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.