கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவம் தொடா்பாக எஸ்டேட் மேலாளர் நடராஜன் முதல் முறையாக சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு தொடா்பாக அவருக்கு ஏற்கெனவே 2 முறை சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அவா் ஆஜராகவில்லை. இந்த நிலையில், வழக்கின் முக்கிய சாட்சியாக கருதப்படும் எஸ்டேட் மேலாளர் நடராஜன், கோவை காந்திபுரம் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
அவரிடம் சிபிசிஐடி உயா் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். சசிகலா குடும்பத்திற்கு அவர் நெருக்கமானவர் என கூறப்படுவதால், அவரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேர் உள்பட இதுவரை சுமார் 250 பேரிடம் சிபிசிஐடி போலீஸார் வாக்குமூலம் பெற்றது குறிப்பிடத்தக்கது.