தென்கொரியாவில் விமானப் படை போர் பயிற்சியின்போது தவறுதலாக குடியிருப்பு பகுதியில் எட்டு வெடிகுண்டுகள் விழுந்து வெடித்ததில் 15 பேர் காயமடைந்தனர்.
தென்கொரியாவின் போச்சியோன் நகரில் தென்கொரியா மற்றும் அமெரிக்க விமானப் படை வீரர்கள் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டனர். விமானத்தில் போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது தென்கொரிய விமானப் படை வீரர்கள் பயணித்த 2 விமானத்திலிருந்து குறிப்பிட்ட இலக்குக்கு வெளியே எட்டு குண்டுகள் விழுந்தன.
பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் தலா 225 கிலோ எடை கொண்ட குண்டுகள் விழுந்து வெடித்ததில், வீடுகளின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. மேலும், கண்ணாடி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் உடைந்து சிதறிய நிலையில், இடிபாடுகளில் சிக்கி 15 பேர் காயமடைந்தனர். அதில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல தேவாலயம் அருகே வெடிகுண்டு விழுந்ததில், அந்த வழியாக வந்த வாகனம் உருத்தெரியாத அளவுக்கு சேதமடைந்தது.