கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நலம் பெற வேண்டி, போர்ச்சுகலில் கிறிஸ்தவர்கள் சுவரோவியம் வரைந்தனர்.
போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவால் வாடிக்கன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்ததாக மருத்துவமனை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இந்த நிலையில், போப் குணமடைய வேண்டி போர்ச்சுகலின் போன்டன்ஸ் நகரில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கண்கவர் உடையணிந்து நடனமாடி, போப் பிரான்சிஸின் சுவரோவியத்தை வரைந்தனர். மேலும், சாத்தானின் உருவத்தை எரித்து போப் நலம்பெற பிரார்த்தனை செய்தனர்.