மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020ம் ஆண்டு வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 2ம் பாகத்தை எடுக்கப் போவதாக படக்குழு அறிவித்தது. இதில் மூக்குத்தி அம்மனாக நயன்தாரா மீண்டும் நடிக்க, சுந்தர்சி இத்திரைப்படத்தை இயக்குகிறார்.
100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இத்திரைப்படம் உருவாகும் நிலையில், பூஜைகளுடன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த பூஜையில் மத்திய அமைச்சர் எல்.முருகனும் கலந்து கொண்டார்.