சாம்பியன்ஸ் கோப்பையை நியூசிலாந்து அணி வெல்ல வேண்டும் என தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய டேவிட் மில்லர், 67 பந்துகளில் சதமடித்தார். போட்டி முடிந்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இறுதிப்போட்டி சிறப்பானதாக அமையும் என கூறினார்.
மேலும், இந்த போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்பதே தனது விருப்பம் எனவும் டேவிட் மில்லர் கூறினார்.